WhatsApp Messenger மற்றும் Facebook அதிகம் உபயோகிப்பவரா நீங்கள்? அப்படி என்றால் நீங்கள் உங்கள் மொபைலில் அதிகம் டைப் செய்ய வேண்டியது இருக்கும். இல்லையெனில் நீங்கள் ஏதேனும் மெயில் அனுப்ப வேண்டும் என்றாலோ அல்லது சில தகவல்களை யாருக்காவது அனுப்ப வேண்டும் என்றாலும் உங்களுக்கு டைப் செய்வதற்கு கடினமாக இருக்கும். உங்கள் பளுவை குறைப்பதற்காக இதோ ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.
Typing Hero என்ற app- ஐ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எளிதாக மற்றும் வேகமாக டைப் செய்ய முடியும். நீங்கள் ஏதேனும் ஒரு வாக்கியத்தை அடிக்கடி டைப் செய்ய விரும்பினால் அந்த வாக்கியத்தை இந்த appல் ஒருமுறை டைப் செய்து வைத்துக்கொண்டு அதற்கு ஒரு keyword-ஐ கொடுக்கவும். இவ்வாறு ஒரு முறை செய்துவிட்டால் போதும் இனிமேல் நீங்கள் எப்போதாவது அந்த வாக்கியத்தை டைப் செய்வதற்கு keyword-ஐ மட்டும் டைப் செய்தால் போதும் தானாகவே நீங்கள் டைப் செய்ய நினைத்தது வந்துவிடும்.