Radon - Share using Ultrasound


Radon - Share using Ultrasound




வளர்ந்து  வரும் இன்றைய கால தொழில்நுட்பத்தால் நாம் அனைவருமே ஈர்க்கப்பட்டு இருக்கிறோம் என்பதில் ஐயப்பாடு இல்லை.  நமக்குத் தெரிந்த பல விஷயங்களை நம் நண்பர்களுடனும் பரிமாறிக் கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு பரிமாறிக் கொள்வதற்கு நாம் பல social media-க்களை உபயோகித்து வருகிறோம். நாம் படித்துக் கொண்டிருக்கும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் தகவல்களை நமக்கு அருகில் இருக்கும் நமது நண்பர்களுடன் share செய்ய விரும்பினால் whatsapp அல்லது ஃபேஸ்புக் போன்ற social media  இல்லாமலேயே share செய்ய முடியும். Radon என்ற ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் மூலம் நாம் நமது கைப்பேசியில் பார்த்துக்கொண்டு இருக்கும் விஷயங்களை நமது அருகில் இருக்கும் நமது நண்பர்களுடன் மிக எளிதாக ஷேர் செய்ய முடியும். இதற்காக Bluetooth மற்றும் Wi-Fi இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் Radon அப்ளிகேஷனை install செய்துவிட்டு உங்களுக்கு அருகில் இருக்கும் உங்கள் நண்பர்களையும் install செய்ய வைத்துவிட்டு பின்பு உங்களது மொபைலில் நீங்கள் என்ன படித்தாலும், பார்த்தாலும் அதையே அருகிலிருக்கும் உங்கள் நண்பர்களும் பார்க்க முடியும். எத்தனை பேர் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.


App Download Link : Radon App